தமுமுக தலைமையகத்தில் தமுமுக தலைவர் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரை


தமுமுக தலைமையகத்தில் தமுமுக தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நமது நாட்டின் 61வது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி அடைகின்றது.

250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலவிய வெள்ளை ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்த்தவர்கள் சீக்கியர் என நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகம் செய்ததினால் முறியடித்து 1947ல் விடுதலைப் பெற்றோம். அத்தகைய ஒற்றுமை உணர்வும், நல்லிணக்கப் பண்பாடும் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.

நாடு 61வது விடுதலைத் திருநாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அமெரிக்காவிடம் நமது நாட்டின் இறையாண்மையை அடகுவைத்து அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த மனவேதனையை அüக்கின்றது. இதே போல் நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இந்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் சதவிகிதத்தை விட அதிகமாகத் தியாகம் செய்த முஸ்லிம் சமுதாயத்தை ஒரு குற்றப்பரம்பரை போன்று காவல்துறையில் ஒரு பிரிவினரும், ஊடகத்தின் ஒரு பிரிவினரும் சித்தரித்து வருவதும் பெரும் ரணங்களைச் சிறுபான்மை சமுதாயத்தின் உள்ளங்கüல் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய இக்கட்டான காலக்கட்டத்தில் நாட்டின் இறையாண்மையை காக்கவும், நாட்டில் தீவிரவாத சிந்தனை வேரறுக்கப்படவும், அனைத்து சமூகங்கüடையே நல்லிணக்கம் மேலோங்கவும் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோமாக. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி. மாநிலச் செயலாளர் மௌலா நாசர். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக ஊழியர்களும் மக்கள் உரிமை ஊழியர்களும் கலந்து கொண்டனர்

 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.