முகப்பேர் அடக்கஸ்தலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க
தமிழக அரசுக்கு தமுமுக கெடு!

ராமேஸ்வரம் ராஃபி



அரசு முஸ்லிம்களுக்கு ஒதுக்கிய அடக்கத்தலத்தை (கப்ருஸ்தான்) ஆக்கிரமிக்கத் துடிக்கும் சமூக விரோதிகளின் சதியை முறியடிக்க கடந்த 12லி08லி08 அன்று முகப்பேர் கப்ருஸ்தான் மீட்புப் போராட்ட அறிவிப்பு பொதுக்கூட்டம் முகப்பேர் ரோடு, மண்ணுôர் பேட்டை, பாடியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அம்பத்தூர் நகர தமுமுக தலைவர் எஸ். அப்துல் காதர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எஸ். அப்துல் ரகுமான் வரவேற்புரையாற்றினார்.


பொதுக்கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் எஸ்.டி.கமருதீன், மா.செயலாளர் ஹாரூன் ரசீத், மா.பொருளாளர் ஷேக் தாவூது, தொழிலாளர் அணி செயலாளர் எம். ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு சென்னை முஸ்லிம் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் சலாம் சுலைமான், மற்றும் நிர்வாகிகள் எம்.ஏ. ரஹீம், அப்துல் கனி, கே. சலீம் மற்றும் மஸ்தான் முன்னிலை வகித்தனர்.

 

முகப்பேர் கப்ருஸ்தான் மீட்பு பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்...

''சென்னையைப் பொறுத்தமட்டில் ஒரு மனிதர் மரணித்தால் அவரை அடக்கம் செய்வதற்கு வெகுதூரம் கொண்டு சென்றுதான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முகப்பேரி லோ, திருமங்கலத்திலோ, அண்ணா நகரிலோ இருக்கக்கூடிய முஸ்லிம்கள் இறந்து விட்டால் அவர்களை அமைந்த கரையில் உள்ள அடக்கஸ்தலத்திற்குச் சென்றுதான் அடக்கம் செய்து விட்டு வருகிறார்கள். ஆனால் அமைந்தகரை யிலுள்ள கப்ருஸ்தானில் போதிய இட நெருக்கடி காரணமாக அங்கேயும் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

மேற்கு சென்னையில் வாழும் முஸ்லிம்களிடமிருந்து அப்பகுதியில் மரணிப்போர்களை அடக்கம் செய்வதற் காக கபரஸ்தான் (அடக்கஸ்தலம்) வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலம் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத் திட்டத்தில் முகப்பேர் ஏரி ஸ்கீமில் 10 கிரவுண்ட் 680 சதுரடி நிலம் முஸ்லிம்களின் பிரேத அடக்கத் திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 19லி12லி2001 அன்று அம்பத்தூர் நகராட்சியின் மண்டல இயக்குநராக இருந்த திருமதி. ஆர். ஜெயலட்சுமி அவர்களால் 'மேற்கு சென்னை முஸ்லிம் நலச் சங்கத்திற்கு' ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது.
 

ஆனால் சில சமூக விரோதிகள், இந்தப் பகுதியை முஸ்லிம் களுக்கு கொடுத்து விட்டார் களே என்கிற காழ்ப்புணர்ச்சி யின் காரணமாக அதனை ஆக்கிரமித்து விடுகிறார்கள். அந்த சமூக விரோதி யாரென் றால் இன்று அம்பத்தூர் நகராட்சி யின் துணைத் தலைவராக இருக்கக்கூடிய நீலகண்டன்.
உடனே ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கு சென்னை முஸ்லிம் நலச்சங்கம் புகார்களை உரியவர்களுக்கு அனுப்புகின்ற னர். காவல்துறையின் மூலம் ஆக்கிரமிப்பு உடனே அகற்றப் படுகின்றது.


 

பின்னர் 29லி06லி2004 அன்று கபரஸ்தானைச் சுற்றிலும் சுற்றுச் சுவரை எழுப்ப முனைகின்றனர் முஸ்லிம் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள். உடனே நீலகண்டனும் சேகர் மற்றும் பாஞ்சா என்கிற மூவரும் அம்பத்தூர் நகராட்சியில் ஒரு பொய் வழக்கைத் தொடுத்து, போலியான தஸ்தாவேஜு களைக் கொண்டும், கபரஸ்தான் சார்பாக வாதாடிய வழக்கறிஞரையும் சரி செய்து விட்டு கபரஸ்தானைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு இடைக்காலத் தடையை வாங்கிவிடுகின்றனர். பின்னர் முஸ்லிம் நலச் சங்கத்தினர் சார்பில் தனியாக வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வருகின்றது.
 

இவ்விஷயம் தமுமுகவின் கவனத் திற்கு வந்தபின்னர் உள்துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்களை தமுமுகவும், மேற்கு சென்னை முஸ்லிம் நலச் சங்கத்தாரும் நவம்பர் 15, 2006ல் சந்தித்து கபரஸ்தானில் அடிப் படை வசதிகள் செய்து தருவதற் காக கோரிக்கை வைக்கப்படுகின்றது.
 

டிசம்பர் 1, 2006 அன்று அம்பத்தூர் நகராட்சிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சரிட மிருந்து 'அடக்கஸ்தலத் திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்' என்று கடிதம் வருகிறது. உடனே 18லி12லி2006 அன்று நகராட்சியின் சார்பில் முகப்பேர் கபரஸ்தானுக்கு அடிப்படை வசதிகள் செய்வ தற்கு டென்டர் கோருவதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக் கையும் வைக்கப்படுகிறது. பின்னர் 29லி01லி2007 அன்றும் அதே கோரிக்கை வைக்கப்படு கிறது. ஆனால் நீலகண்டன், சேகர், பாஞ்சா போன்ற சமூக விரோதிகள், 'வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது' என்று பொய் யுரைத்து தீர்மானத்தை தடை செய்துள்ளனர்.
 

என்.கே.கே.பி.ராஜா என்பவர், ஈரோடு சட்டமன்றத்தில் இருந்து வெற்றி பெற்றவர். அவர் ஈரோட்டில் வாழ்ந்த முஸ்லிம் களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டார். முஸ்லிம்களின் கடைகளையும் ஆக்கிர மிக்கத் தொடங்கினார். அவருக்கு த.மு.மு.க.தான் முதல் 'குட்டு' வைத்தது. அதனால் இன்று அவர் பதவியிலேயே இல்லை.
 

நீலகண்டன், சேகர், கன்னியப்பன் ஆகியோருக்கு தமுமுக எச்சரிக்கை விடுக்கின்றது. இந்த மூவரும் ஒழுங்கு மரியாதையாக முகப்பேர் கபரஸ்தான் பிரச்சனையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவிற்கு ஏற்பட்ட நிலையைக் காட்டிலும் மோசமான நிலைமை ஏற்படும்.
 

எங்களுக்குப் புரியவில்லை. அம்பத்தூ ரில் முதலமைச்சராக இருப்பது முதல்வர் கருணாநிதியா? அல்லது நீலகண்டனா? தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினா? நீலகண்டனா? என்று.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை இந்த முகப்பேர் கபரஸ்தான் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவைச் சேர்ந்த அம்பத்தூர் துணைத் தலைவர் நீலகண்டன், சேகர், கன்னியப்பன் ஆகிய மூவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் புதிதாக தொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொய் வழக்குகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். கபரஸ்தானுக்குரிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் அரசுக்கு அவகாசம் தருகிறோம். அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று முகப்பேர் கபரஸ்தான் முஸ்லிம்களிடம் ஒப்படைக் கப்பட வேண்டும். இதற்கு நிச்சயமாக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து முஸ்லிம்களுக்குரிய அடக்கஸ் தலம் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக் கப்பட வேண்டும்.
 

இல்லையேல், எவ்வளவு பெரிய சக்திகள் எதிர்த்து நின்றாலும் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கிடும் போராட் டங்களை தமுமுக நடத்தி முகப்பேர் கபரஸ்தானை மீட்கும்''
 

இவ்வாறு தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.