|
கப்சா திட்டம்!
அஜீத் சாஹி (ஆசிரியர் தெஹல்கா)
(SIMI
FICTIONS-சிமி கற்பனை கதைகள் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு வாய்ந்த ஆய்வு
தொகுப்பை தெஹல்கா வார இதழ் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர்கüல் ஒருவரான
அஜித் சாஹி மூன்று மாத காலம் இந்தியா முழுவதும் பயணம் செய்து மேற்கொண்ட
விசாரணைகளின் தொகுப்பு தெஹல்கா வார இதழில் 4 இதழ்களாக வெளிவந்துள்ளது.
தலைசிறந்த புலனாய்வு இதழியல் பணியை அஜித் சாஹி மேற்கொண்டு அளிக்கும்
தகவல்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அüத்துள்ளது. மனசாட்சி
உடையவர்களின் உள்ளங்களைக் கரைத்துள்ளது. அஜித் சாஹி தந்துள்ள இந்தத்
தொகுப்பில் இருந்து சென்ற இதழில் 'தேன் கூட்டைக் கலைத்த நீதிபதி' என்ற
தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டோம். சிமி தொடர்பான புலனாய்வு
கட்டுரைகள் அனைத்தையும் தமிழாக்கம் செய்து வெüயிடும் உரிமையை அதன்
வெளியீட்டாளர்கள் 'மக்கள் உரிமை'க்கு அளித்துள்ளனர். தொடர்ந்து தெஹல்கா
இதழில் வெüவந்த அந்தக் கட்டுரை களின் தமிழாக்கம் மக்கள் உரிமையில்
வெளிவரும் (இன்ஷா அல்லாஹ்). இக்கட்டுரைகள் அனைத்தும் இறுதியில்
புத்தகமாக வெüயிடப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கஃப்சா திட்டம் என்ற தலைப்பில் அஜித் சாஹி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
இந்த இதழில் இங்கு கப்சா திட்டம் என்று தலைப்பிட்டு
வெüயிடப்படுகின்றது-ஆசிரியர்)
''சாமானிய
மக்கள் சாதாரணமாகப் போருக்குச் செல்ல விரும்புவதில்லை.... இது
புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் நாட்டின் தலைவர்கள் தான்
அந்நாட்டின் கொள்கையை வகுக்கின்றார்கள். அவர்களது திட்டங்களுக்கேற்ப
மக்களை அவர்கள் இழுத்துச் செல்வது கடினமான காரியம் அல்ல. அந்நாடு
ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி, பாசிசத்தின் அடிப்படையிலான சர்வாதி கார
ஆட்சி நடைபெறும் நாடாக இருந்தாலும் அல்லது பொதுவுடமை சர்வாதிகார நாடாக
இருந்தாலும் இதே நிலை தான் இருக்கின்றது. குரல் கொடுக்கும் உரிமை
இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தலைவர்கüன் விருப்பத்திற்கேற்ப
மக்களை வளைத்துக் கொள்ளலாம் என்ற நிலைதான் உள்ளது. இது மிக எüதான
காரியமாகவும் உள்ளது. நீங்கள் மக்களிடம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று
தான். மக்களே நீங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளீர்கள் என்று
பிரச்சாரம் செய்வது தான். இது மட்டுமின்றிப் போருக்கு எதிராக
பிராச்சாரம் செய்யும் சாத்வீகவாதிகள் எல்லாம் தேச விரோதிகள் என்றும்
அவர்கள் நாட்டை ஆபத்திற்கு இலக்காக்குகின்றார்கள் என்றும் பிரச்சாரம்
செய்ய வேண்டியது மட்டும்தான். இந்தத் திட்டம் எல்லா நாடுகüலும்
பயன்தரும் திட்டம் ஆகும்.'' ஹெர்மென் வில்ஹெம் கோயரிங், நாஜி கட்சித்
தலைவர்.
2001 செப்டம்பர்
27 காலை பொழுதில் தெற்கு டெல்லியில் முஸ்லிம் கள் நிறைந்து வாழும்
அந்தப் பகுதியில் யுனானி மருத்துவரும், இந்திய மாணவர் இஸ்லாமிய
இயக்கத்தின் அனைத்திந்திய தலைவருமான டாக்டர் சாஹித் பத்ர் பலாஹி தனது
சகாக்களுடன் சிமி அலுவலகத்தில் அடுத்த என்ன நடக்கப் போகின்றதோ என்பது
குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு
பகுதிகüல் இரண்டு வாரங்கள் பல்வேறு பொதுக் கூட்டங்கüல் பேசிவிட்டு
முந்தைய இரவுதான் களைப்புடன் அவர் திரும்பி யிருந்தார். டெல்லிக்குத்
திரும்பிய பிறகு இந்தியா முழுவதும் உள்ள தனது மாநிலத் தலைவர்களுடன் அவர்
அப்போது தான் தொலைபேசியில் பேசி முடித்திருந்தார். தனது அலுவலகத்தில்
உள்ள நீண்ட துôர பொதுதொலைபேசி வாயிலாக மும்பை, லக்னோ, இந்தோர்,
கொல்கத்தா, சென்னை, கோழிக்கோடு, பாட்னா மற்றும் பல்வேறு நகரங்கüல்
இருந்து பேசிய சிமி நிர்வாகிகள் அüத்த தகவல்கள் ஒன்று போலவே
அமைந்திருந்தன. முந்தைய இரவு எவ்வித காரணமும் சொல்லாமல் சிமி
அலுவலகங்களைக் காவல்துறையினர் மூடி முத்திரையிட்டு விட்டார்கள் என்று
ஒன்றின்பின் ஒன்றாகத் தகவல்கள் வந்து கொண்டிருந் தன. மாலை 4 மணிக்கு
இந்த நிகழ்வு களுக்கு என்ன காரணம் என்பதை சாஹித் பத்ர் அறிய வந்தார்.
1967ல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக
இரண்டாண்டு காலத்திற்கு சிமியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை
செய்துள்ளதாக தொலைக்காட்சிகள் செய்தியை அறிவித்தன.
சிமி தடைக்கு
அத்வானி கூறும் காரணங்கள்
அன்று மாலை
மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி செய்தியா ளர் கூட்டத்தில்
பேசுகையில், ''இந்த (சிமி) அமைப்பின் தன்மைகள் வெட்ட வெளிச்சமாகி
விட்டன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முதல்கட்டத் தகவல்களும்
அந்த அமைப்பின் நோக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளன'' என்று கூறினார். சிமி
மீது தடையை அறிவித்து அவரது உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வெüயிடப்
பட்ட அறிக்கையும் கூட அத்வானியின் கூற்றை விவரித்தது. ''நாட்டின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அüக்கும் வகையில் சிமியின் நடவடிக்கைகள்
அமைந்துள்ளன. அதன் நடவடிக்கைகள் நாட்டில் அமைதியையும் சமூக
நல்லிணக்கத்தையும் குலைத்து நாட்டின் மதச்சார்பின்மைக்கு கேடு
ஏற்படுத்தி விடும்'' என்று ஆறு பத்திகள் கொண்ட அந்த அறிவிக்கை
தெரிவித்தது. சிமியைத் தடை செய்ய எவ்வித சந்தேகத் திற்கும் இடம்தராத
வலுவான சான்று அரசிடம் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போன்று
இந்த அறிவிப்பு கள் அமைந்திருந்தன.
சிமி மீது சுமத்தப்பட்ட இன்னும் சில கடுமையான குற்றச்சாட்டுகள்
வருமாறு:
-
தீவிரவாத
அமைப்பு களுடன் நெருக்க மான தொடர்பு வைத்து, பஞ்சாப், ஜம்முகாஷ்மீர்
மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதச்
செயல்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது.
-
இந்தியாவில்
இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவு தெரிவித்ததுடன் அதற்காகப்
போராடும் அமைப்பு களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வின்
ஒருமைப்பாட்டை கேள்விக் குறியாக்கியது
-
சர்வதேச
இஸ்லாமிய கட்டமைப்பை உருவாக்கப் பாடுபட்டு வந்தது
-
வகுப்புவாத
உணர்வுகளை தூண்டி விடும் வகையில் ஆட்சேபனைக் குரிய சுவரொட்டி
மற்றும் பிரசுரங் களை வெளியிட்டதுடன் இந்தியா வின்
ஒருமைப்பாட்டையும் கேள்விக் குறியாக்கியது
இந்தியா
முழுவதும் வகுப்புக் கலவரங்களை ஏற்படுத்தும் பணியில் சிமி ஈடுபட்டு
வந்தது என்ற மிக மோசமான குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டது. சிமி நடத்திய
பல்வேறு மாநாடுகüல் சிமியின் தேசவிரோத மற்றும் தீவிரவாத போக்குகள் வெüப்
பட்டன என்று தடையை விதித்த அறிவிக்கை கூறியது. இந்த மாநாடுகüல் பேசிய
தலைவர்கüன் உரைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பழமை வாதத்தைச்
சிறப்பித்துப் பேசினார்கள் என்றும் கூறி, சிமியின் கொடூரமான உக்திகளை
வெளிப்படுத்தியது போல் அறிவிக்கை யில் தெரிவிக்கப்பட்டது. பிற
சமயத்தவர்களின் கடவுளர்களை நிந்தித்ததுடன் முஸ்லிம்களை ஜிஹா திற்கு
அழைக்கும் வகையில் தலைவர் களின் பேச்சுகள் அமைந்தன என்றும்
அறிவிக்கையில் கூறப்பட்டது.
சாஹித் பத்ர்
பலாஹிக்கும் அவரது சகாக்களுக்கும் இந்த நிலை ஏற்படப் போகின்றது என்று
முன்பே தெரியும். ஒரு மாதத்திற்கு மேலாக குறிப்பாக செப்டம்பர் தாக்குதல்
நடைபெற்ற பிறகு அத்வானி சிமி மீதான தனது தாக்குதல் களை
அதிகப்படுத்தியிருந்தார். உள்துறை அமைச்சரின் தாக்குதல்களைக் கடுமையாக
பலாஹி விமர்சித்து இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 20 அன்று
பலாஹி கோபம் கொப்பளிக்கும் வகையில் ஒரு பத்திரிகை அறிக்கையை
வெüயிட்டிருந்தார். அந்த நாட்கüல் ஊடகங்கள், சிமியின் கருத்துகளுக்கு
தாராளமாக இடம்கொடுத்துக் கொண்டி ருந்தன. முஸ்லிம்கள் இனியும் அநீதியை
யும் அக்கிரமத்தையும் சகித்துக் கொண்டி ருக்க மாட்டார்கள். தங்கள்
உரிமைகளுக் காக உறுதியான போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று
சாஹித் பத்ர் தனது அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தார். அதிகரித்து வரும்
இஸ்லாமிய விழிப்புணர்வு. சங்பரிவார் அமைப்பு களைக் கதிகலங்க வைத்துள்ளன
என்று அந்த அறிக்கையில் கூறிய சாஹித் பத்ர், அயோத்தியில் ராமர் கோவில்
கட்டு வதற்கும் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதற்கும் இடையூறாக
இருப்பது சிமிதான் என்று சங்பரிவார் கருதுவ தாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
அத்வானியை கடுமையாக விமர்சித்த சிமி
அத்வானியைக் கடுமையாக விமர்சித்த சாஹித் பத்ர், 1992ல் அயோத்தி யில்
பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு அத்வானியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்
தான் காரணம் என்று காட்டமாகக் கூறினார். 1990ல் அத்வானி நடத்திய
ரதயாத்திரை நாடு முழுவதும் கலவரத் தைத் தூண்டிவிட்டதை தனது அறிக்கை யில்
பலாஹி நினைவூட்டினார். சிமி மீது வழக்குத் தொடுப்பதற்கு அரசிடம் எவ்வித
ஆதாரமும் இல்லை எனவும் பொய்யான காரணங்கள் உருவாக்கப் படுகின்றன என்றும்
பலாஹி தனது அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த நாள் வரை சிமி மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கüல் ஒன்று கூட நிரூபிக்கப்படவில்லை. ஆனால்
கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட
கலவரங்கள் சங்பரிவார் அமைப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை
பல்வேறு விசாரணை ஆணையங்கள் தெüவாக நிரூபித்துள்ளன. இந்தியாவின் உள்துறை
அமைச்சரைக் கடுமையாகச் சாடி சாஹித் பத்ர் வெüயிட்ட இந்த அறிக்கை எந்த
வகையிலும் அசாதாரண மானது அல்ல. ஆனால் தனது பேச்சு சுதந்திரத்தைப்
பயன்படுத்த அவருக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக இது அமைந்து விட்டது என்றே
ஆகிவிட்டது.
தடைவிதிக்கப்பட்ட செப்டம்பர் 27 அன்று சாஹித் பத்ர் பலாஹியும் அவரது
மூன்று சகாக்களும் தங்கள் அலுவலகத்திலேயே காவல்துறை அதிகாரிகüன்
வருகைக்காகக் காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப நள்üரவு
கடந்தபின் காவல்துறையினர் அலுவல கத்திற்குள் புகுந்து அவர்களைக் கைது
செய்தனர். நாங்கள் கதவைத் திறப்பதற்கு முன்பாக அதனை உடைத்து உள்ளே
நுழைந்தார்கள் என்று தெஹல்காவிடம் உ.பி. மாநிலம் ஆஜம்கரில் உள்ள தனது
இல்லத்தில் இருந்து கூறினார் சாஹித் பத்ர். அவர் ஆஜம்கரில் வாழ்ந்து,
மருத்துவச் சேவை ஆற்றி வருகிறார். காவல் நிலையம் செல்லும் வரை காவல்
துறையினர் எங்களை எட்டி உதைத்து நிந்தித்துக் கொண்டே வந்தார்கள் என்றும்
அவர் தெரிவித்தார். 240க்கும் குறைவில்லாத எண்ணிக்கையில் சிமியைச்
சேர்ந்தவர்களை நாடு முழுவதும் நடத்திய வேட்டையில் கைது செய்திருப்பதாக
அரசு அறிவித்தது.
மறுநாள், மத்திய உள்துறை செய லாளர் கூட்டிய செய்தியாளர் மாநாட்டில்,
சிமிக்கும் உஸாமா பின்லேடன் / அல்காயிதாவுடன் தொடர்பு இருப்ப தாகவும்,
பாலஸ்தீன கொரில்லாப் படையான ஹமாஸ் அதன் கொள்கை ரீதியான கூட்டாளி என்றும்
பிரம்மாண்டப்படுத்தி கருத்துத் தெரிவித்தார் உள்துறைச் செயலாளர்.
தேசவிரோத வீடியோ மற்றும் ஆடியோ கேசட்டுகள் மற்றும் இதர பிரச்சாரப்
பொருட்கள் சிமி இயக்கத்தவர்கüடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும்
அறிவிக்கப்பட்டது. தாலிபான்களுக்கு ஆதரவான பிரசுரங்களை சிமி இயக்கத்தவர்
டெல்லி மற்றும் இதர நகரங்கüல் வினியோகித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் அப்போதும் சரி பல ஆண்டுகள் கழித்து இப்போதும் சரி கைப்பற்றப்பட்ட
ஆட்சேபகரமான பொருட்கள் யாவை என்ற விபரம் மட்டும் தெரிவிக்கப்பட வில்லை.
சிமிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகüல் இதுபோன்ற
பொருட்கள் கைப்பற்றப் பட்டன என்று தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு
வருகின்றது. ஆனால் இப்பொருட்கüல் உள்ளடக்கமாக இருக்கும், இணைய தளங்கüல்
எüதாகக் கிடைக்கும் உஸாமா பின் லேடன் மற்றும் அமெரிக்க மீதான தாக்குதல்
முதலிய வீடியோக்களை வைத்துக் கொண்டு எவ்வாறு சிமியை பயங்கரவாதத்துடன்
தொடர்புபடுத்தி யுள்ளார்கள் என்ற விபரம் மட்டும் எப்போதும்
தெரிவிக்கப்படுவதில்லை.
கோயபல்ஸ் பாணியில் நமது அரசு
உண்மையில் தடைவிதிக்கப்பட்ட ஒரு தினம் கழித்து சிமி மீது ஆதார மில்லாத,
தெüவில்லாத, பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அரசு ஒரு
வழிமுறையாக மேற்கொண்டு வருகின்றது. 2001 முதல் இந்த வழிமுறையை
காவல்துறையும், உளவுத்துறையும் மிக நுட்பமாக வடிவமைத்து வந்துள்ளன.
நாஜிகüன் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபல்ஸ் பரிந்துரைத்த
வடிவத்தில் நமது அரசும் தொடர்ச்சியாக குற்றச் சாட்டுகளைச் சுமத்தி
வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமானவையா நிரூபிக்கப்பட்டவையா
என்றெல்லாம் உரசிப் பார்க்காமல் அப்படியே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வழக்கமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் போது அமைச்சர்களும்,
காவல்துறை அதிகாரிகளும் சிமி மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை அப்படியே
செய்தி ஊடகங்களும் பரப்பி வந்தன. இருப் பினும் பொது அரங்கில் எந்த ஒரு
அத்தாட்சியும் ஆதாரமும் அüக்கப்படு வதில்லை. நீதிமன்றங்கüல் ஆதாரங்கள்
என்று சமர்ப்பிக்கப்படுபவை குற்றப் புலனாய்வு முறைமையின் கோட்பாடு களை
கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்துள்ளன.
தடை விதிக்கப்பட்ட அன்றைய தினம் சிமி மீது சொல்லப்பட்ட ஏராளமான
குற்றச்சாட்டுகள் வெற்று வேட்டுகளா கவே இருந்தன. குரோதத்தை துôண்டும்
சுவரொட்டிகளை சிமி அமைப்பு வெü யிட்டதாகவும், வகுப்புப் பதட்டத்தை
ஏற்படுத்தும் பத்திரிகை அறிக்கைகளை சிமி வெளியிட்டதாகவும் உள்துறை
செயலாளர் தெரிவித்திருந்தார். எத்தகைய வகுப்புப் பதட்டம் ஏற்பட்டது
என்பது பற்றிய விபரங்களையோ அல்லது எந்த வகையில் சுவரொட்டிகள்
குரோதத்தைத் துண்டின என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சிமி
நாடு முழுவதும் சுவரொட்டிகளையும், துண்டு பிரசுரங்களையும் வினியோகம்
செய்தது என்று மட்டுமே அவர் கூறினார். இந்தப் பிரசுரங்கüல் என்ன
சொல்லப்பட்டன, இவை எப்படி சட்டத்திற்கு முரணாக அமைந்தன என்பது குறித்து
அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
குர்ஆன் எரிப்பைக் கண்டித்த போராட்டம் சட்டவிரோத நடவடிக்கை
சட்டப்பூர்வமான செயற்பாடுகள் கூடச் சட்டவிரோதமானவை என்றும் பிரிவி
னையைத் தூண்டுபவை என்றும் முத்திரையிடப்பட்டன. டெல்லியில் திருக்குர்ஆன்
பிரதி எரிக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த
மார்ச் 2001 அன்று சிமி அழைப்பு விடுத்திருந்தது. சிமி மீதான தடையை
நியாயப்படுத்துவதற்காக இந்தப் போராட்ட அறிவிப்பும் சட்டவிரோதமான
நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டது. குர்ஆன் எரிப்புக் குறித்து
இணையத்தில் சிமி விரிவான பிரச்சாரம் செய்தது என்று உள்துறைச் செயலாளர்
கருத்து தெரிவித் தார். நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி
இணையத்தை சிமி இயக்கத்தினர் பயன்படுத்தி வருவது அவர்களது தேசவிரோத
மற்றும் சட்டத்திற்குப் புறம்பான குறிக்கோள்களை நிரூபிப்பதாக காவல்துறை
அதிகாரிகள் இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்றங் கüல் தெரிவித்தனர். (சில
குற்றச்சாட்டுகள் மிக அபத்தமானவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு
கிரிமினல் வழக்குகள் தொடுத்திருப்பது ஆச்சரிய மாக உள்ளது. இத்தகைய
குற்றச்சாட்டு கüல் ஒன்று, மார்ச் 2001ல் சிமி உறுப்பினர்களுக்கு
நீச்சல் மற்றும் குதிரையேற்ற பயிற்சி அüத்தார் என்பது ஒருவர் மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. மற்றொன்று தனது வீட்டிற்கு முன்னாள் நின்று
கொண்டு இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார் என்பது இன்னொருவர்
மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு. மராட்டிய மாநிலம் இந்தியாவை விட்டுப்
பிரிய வேண்டும் என்று விரும்பினார் என்று கூறி மற்றொருவர் மீது
மராட்டிய காவல்துறை குற்றஞ் சாட்டியது.)
இரண்டு ஆண்டுகளுக்கு விதிக்கப் பட்ட தடை முடிவடைந்த மறுநாள் செப்டம்பர்
27, 2003 அன்று உள்துறை அமைச்சர் அத்வானி மீண்டும் சிமி அமைப்பு மீது
இரண்டாண்டுகளுக்கு தடை விதித்தார். தடையை விதித்து புதியதோர் அறிவிக்கை
வெüயிடப் பட்டது. ஆனால் இந்த அறிவிக்கையிலும் முதல் முறை தடைச்
செய்யப்பட்டபோது கூறப்பட்ட அதே பயங்கரக் (?) குற்றச் சாட்டுகள்
இடம்பெற்றிருந்தன. ஆனால் வழக்கம் போல் எவ்வித ஆதாரமும் அüக்கப்படவில்லை.
இந்தத் தடை காலம் பாதி அளவை எட்டிய நிலையில் 2004ல் நடைபெற்ற நாடாளு
மன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வி அடைந்து
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. செப்டம்பர் 2005ல் சிமி
மீதான தடை காலாவதியாக புதிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அனுமதி
அüத்தார். ஆனால் 4 மாதங்கள் கழித்து, பிப்ரவரி 2006ல் உள்துறை அமைச்சகம்
மூன்றாம் முறை மீண்டும் சிமி மீது தடை விதித்தது. இந்த தடைக் காலம்
முடிவடைந்த உடன் மீண்டும் சிமி மீது நான்காம் முறையாக இவ்வாண்டு
பிப்ரவரி 7 அன்று தடை விதிக்கப்பட்டது. இப்போது வெüயிடப்பட்ட தடை
அறிவிக்கையும் 2006ல் வெüயிடப் பட்டது போல் தான் அமைந்திருந்தது.
இந்த நான்கு தடை காலத்திலும் நாடு முழுவதும் சிமி இயக்கத்தவர் என்று
சொல்லப்படுபவர்கள் மீது நூற்றுக்கணக் கான வழக்குகள் பதிவுச்
செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கüல் ஒரு சிலர் நல்வாய்ப்பாக விரைவில் பிணையில் விடுதலை அடைந்தனர்.
இவர்கüல் பெரும்பாலானவர்கள் அற்பமான ஆதாரங்கüன் அடிப்படை யில் ஒரு ஆண்டு
அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தனர். பலமுறை
முயற்சித்த பிறகு பிணையில் விடுதலை ஆனதற்குக் காரணம் 90 நாட்களுக்குள்
அவர்களுக்கு எதிராக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியது
தான். (சிறிய வழக்குகளுக்கு காலகெடு 60 நாட்களாகும்)
பல ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்குகüல் நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும்
சிக்கித் தவிக்கிறார்கள். இந்த வழக்குகüல் பலவற்றில் இன்னும் விசாரணை
கூடத் தொடங்கவில்லை. மேலும் பலர் அற்பமான குற்றச்சாட்டுகள் முதல் மிகக்
கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இன்னும் சிறையில் வாடி
வருகின்றார்கள். அவ்வப் போது புதிய வழக்குகள் தொடுக்கப்பட்டு மேலும்
முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தங்கள் மீதான முந்தைய
வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலும் கூட பலர் மீது மீண்டும்
புதிய வழக்குகள் தொடுக்கப்படு கின்றன.
இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவெனில் பிரிவினை நடவடிக்கை அல்லது
பயங்கரவாத நடவடிக்கையில் சிமி ஈடுபட்டது என்று இந்தியா முழுவதிலும்
உள்ள ஒரு நீதிமன்றத்திலும் கூட எந்த ஒரு வழக்கிலும் காவல் துறையினரால்
நிரூபிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அல்லது வங்காள தேசத்தில் இயங்கும்
பயங்கரவாத அமைப்புகளுடன் சிமிக்கு தொடர்பு உண்டு என்பதை
எடுத்துக்காட்டும் எந்தவொரு ஆதாரத் தையும் காவல்துறையினரால்
சமர்ப்பிக்க இயலவில்லை.
உஸாமா/அல்காயிதா அல்லது ஹமாஸ் அல்லது ஆயுதம் தரித்த காஷ்மீர் அல்லது
பஞ்சாப் குழுக்களுடன் சிமிக்கு தொடர்புண்டு என்பது எங்கும் நிலை
நாட்டப்படவில்லை. (பஞ்சாபில் ஆயுதம் தரித்த போராட்டம் சிமி மீது மத்திய
அரசு குற்றம் சுமத்துவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே 1991ல் முடிவிற்கு
வந்துவிட்டது) வகுப்புக் கலவரங்கள் நடப்பதற்கான வேலைகளை சிமி செய்தது
என்பது குறித்து எந்தவொரு வழக்கிலும் நிரூபணம் ஆகவில்லை. ஆனால் முதல்
தடை அறிவிக்கையில் இடம்பெற்ற இந்தக் குற்றச்சாட்டு அதற்குப் பிறகு
வெüயான எல்லா அறிவிக்கைகüலும் இடம் பெற்றுள்ளது. பிரிவினையை தூண்டும்
பிரசுரங்களை சிமி வெüயிட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்த வரை சுமார்
கால் நூற்றாண்டு காலத்திற்கு (1977 முதல் 2001) வரை சிமி ஏராளமான
இதழ்களை, சுவரொட்டிகளை, துண்டு பிரசுரங்களை அது இயங்கிய காலத்தில்
பிரசுரித்துள் ளது. 1998ல் முதல் வழக்குப் பதிவு செய்யப் படும் வரை 20
ஆண்டு காலத்திற்கு இந்தப் பிரசுரங்கள் குறித்து எந்தவொரு வழக்கும்
பதிவுச் செய்யப்படவில்லை.
(அடுத்த இதழில் தொடரும்)
தமிழாக்கம்: ஜன்னா மைந்தன்
கடைசி வாய்ப்பு!

கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும்
முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் சங்பரிவார் அமைப்பினரால்
திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை பல்வேறு விசாரணை ஆணையங்கள் தெüவாக
நிரூபித்துள்ளன. இந்தியாவின் உள்துறை அமைச்சரை கடுமையாகச் சாடி சாஹித்
பத்ர் வெüயிட்ட இந்த அறிக்கை எந்தவகையிலும் அசாதாரணமானது அல்ல. ஆனால்
தனது பேச்சு சுதந்திரத் தைப் பயன்படுத்த அவருக்குக் கிடைத்த கடைசி
வாய்ப்பாக இது அமைந்துவிட்டது என்றே ஆகிவிட்டது.
சிமி அமைப்பு தடைச் செய்யப்பட்ட பிறகு
சாஹித் பத்ர் பலாஹியும் அவரது சகாக்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த
அழைத்து வரப்பட்ட காட்சி (படம் நன்றி தெஹல்கா வார இதழ்)
|