![]() |
|||
|
|
குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்களை
தூக்கிடுங்கள்...!
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமுமுக தலைவர் அதன் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: ''இந்தியாவில் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்கின்றனர். ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி விடுகின்றன. குண்டு வெடிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து விடுகிறது. போலீசாரின் தவறான நடவடிக்கையால் அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுகிறது. போலீசார் அவர்களை கைது செய்வ தற்கு முன்னர் தீர விசாரணை நடத்தி அதற்கான ஆதாரங்களை சேகரித்த பின்னரே கைது செய்திட வேண்டும். மகாராஷ்டிரா மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பேசுகையில், நாட்டில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்பு சம்பவங்களை ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சாட்டி வருகிறோம். அது தவறான செயலாகும். குண்டு வெடிப்பு வழக்குகளில் தீர விசாரணை நடத்தி குற்றம்சாட்ட வேண்டும். மகராஷ்டிரா மாநிலத்தில் சில பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் சங்பரிவார் அமைப்பினருக்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரது பேச்சினை த.மு.மு.க. கவனத்தில் கொண்டுள்ளது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் முஸ்லிம் அமைப்பு களுக்கும் தொடர்பு இருப்பதாக இந்து முன்னணி, பா.ஜ.க., ஆகியோர் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட் டம் நடத்தினர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி இவ்வழக்கில் தொடர்புடைய இந்து முன்னணியை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிமி அமைப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுகளில் இது போன்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம், சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்துள்ளது. நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபடும் எந்த அமைப்பாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும். இதற்கு த.மு.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது. நாட்டில் நடந்து
வரும் அனைத்து வெடிகுண்டு சம்பவங்களையும் ஒரு நேர்மையான நீதிபதி
தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சிறுபான்மை முஸ்ம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவீத
இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என மிஸ்ரா கமிட்டி அறிக்கையை பிரதமரிடம்
தாக்கல் செய்தது. அதனை அவர் பார்மென்டில் வைத்திட வேண்டும். இந்த
அறிக்கையின் அடிப்படையில் முஸ்ம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
அப்போது தான் வரும் பார்மென்ட் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு
அளிப்போம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாளை ரகுமத் நகரில் கொலை செய்யப்பட்ட அப்துல்ரஷீத் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண நிதி வழங்கிட வேண்டும். இல்லையென்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் பாளை ரபீக், மாவட்டச் செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட துணைத் செயலாளர் ரசூல், மாவட்ட துணைத் தலைவர் பாரூக் ஆகியோர் உடனிருந்தனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||