|
தமுமுக தலைவரின் சுற்றுப்பயண செய்திகள்
ஜித்தாவில் செய்தியாளர் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமுமுக தலைவரின்
வருகையையொட்டி செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசியாநெட்,, கைரளி
தொலைக்காட்சிகள், அரப் நியூஸ், மலையாளம் நியூஸ் உள்ளிட்ட செய்தி
ஊடகங்களின் செய்தியாளர்கள் பங்கு கொண்டார்கள். இந்த செய்தியாளர்
கூட்டத்தின் போது வெளிநாடுகüல் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும்
இந்தியர்களின் நலன்களைப் பேணுவதற்காக இந்திய அரசு சிறப்புத்
திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்று தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டார்.
கேரளா அரசு வெüநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிறப்பு அடையாள
அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போல் தமிழக
அரசும் மத்திய அரசும் அளிக்க வேண்டும் என்று தமுமுக தலைவர் தமது
பேட்டியின் போது குறிப்பிட்டார். மேலும் நீண்ட காலம் வெüநாட்டில்
பணியாற்றி நாட்டின் அந்நியச் செலாவணி பெருக்கத்திற்குப் பெரிதும்
காரணமாக இருக்கும் வளைகுடாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர் ஒய்வு
பெற்று நாடு திரும்பும் போது அவர்களது மறுவாழ்விற்காக இந்திய அரசு
உடனடியாக நலத் திட்டம் வகுக்க வேண்டும் என்றும், வளைகுடா மற்றும்
தென்கிழக்காசியாவில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க
தமிழக அரசு நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் தமுமுக தலைவர் தனது
பேட்டியில் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி விரிவாக வெளியிடப்பட்டது.
மேற்கு மண்டல தமுமுக செயற்குழுக்
கூட்டம்

ஜித்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல செயற்குழுக் கூட்டம் ஜித்தாவில்
கடந்த ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. மேற்கு மண்டல தமுமுக தலைவர் புதுமடம்
இப்றாஹீம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மண்டலத்திற்கு
உட்பட்ட பல்வேறு கிளைகüன் நிர்வாகிகள் பங்கு கொண்டார்கள். கழகப் பணிகள்
குறித்தும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டன.
இஸ்லாமிய வளர்ச்சி வங்கிக்கு தமுமுக
தலைவர் வருகை

ஜித்தாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிக் டெவலெப்மெண்ட் வங்கி
(ஐ.டி,,பி,)யின் தலைமையகத்திற்கு தமுமுக தலைவர் வருகை புரிந்தார். இந்த
வங்கியில் வட்டியில்லாமல் கல்விக் கடன் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரி
ஆதில் சிந்தியை தமுமுக தலைவர் சந்தித்துப் பேசினார். தற்போது
இந்தியாவிற்கு வழங்கப்படும் கல்விக் கடனின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட
வேண்டும் என்று தமுமுக தலைவர் அவரிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்திற்கு அüக்கப்படும் கல்விக் கடன் எண்ணிக்கை இரட்டிப்
பாக்கப்பட்டுள்ளதாக ஆதில் சிந்தி தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார்.
இதுதவிர முஸ்லிம்கள் சிறுபான்மை யினராக இருக்கும் நாடுகüல் கல்வி,
ஆரோக்கியம் தொடர்பாக ஐ.டி.பி.யின் திட்டங்கள் குறித்தும் ஐ.டி.பி.
அதிகாரிகள் விளக்கினர். ஐ.டி.பி.யின் ஆதரவுடன் இயங்கும் வட்டியில்லா
வங்கி குறித்த ஆய்வு நிலையமான ஐ.ஆர்.டி.ஐ.க்கும் தமுமுக தலைவர் வருகை
புரிந்தார். இங்குள்ள பேராசிரியர்கüடம் கருத்துப் பரிமாற்றம் செய்து
கொண்டார். வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் சென்னையில் சிறு கடன்
குறித்து ஐ.டி.பி. நடத்தும் கருத்தரங்கிற்கு முழு ஒத்துழைப்பு தரப்படும்
என்றும் தமுமுக தலைவர் குறிப்பிட்டார்.
ஜித்தா துறைமுகத்தில் தமிழக
சகோதரர்களுடன் சந்திப்பு

ஜித்தா துறைமுகத்தில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மைய நுôலகத்தில் தமிழ் தஃவா
குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களுடன் தமுமுக தலைவர் பேராசிரியர்
டாக்டர் ஜவாஹிருல்லாஹ் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா
குழு தலைவர் சாதிக் ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழகத்தில் இஸ்லாமிய
பணிகள் தொடர்பாக தமுமுக தலைவரிடம் பல விளக்கங்களை கேட்டறிந்தனர்.
ஜித்தா இஸ்லாமிய அழைப்பு மையத்தில் உரை
ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று (ஆகஸ்ட் 28) அன்று முஷ்ரபிப்பா
மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் தென் இந்தியாவில் இஸ்லாம்
பரவிய வரலாறும் அதன் படிப்பினைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர்
ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
மதீனாவில் தமுமுக சகோதரர்களுடன்
சந்திப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தனது சவூதி பயணத்தின் ஒரு பகுதியாக மதீனமா
நகரத்திற்கு வருகை புரிந்தார். மதீனாவில் பணியாற்றும் தமுமுக
சகோதரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் பங்கு கொண்ட
சகோதரர்கள் மிக ஆர்வத்துடன் தமிழக நிலவரம் குறித்து தமுமுக தலைவரிடம்
கேட்டறிந்தனர். மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரியும் இந்த நிகழ்ச்சியில்
பங்குகொண்டு உரையாற்றினார்.
|