|
மீண்டும்
வெகுண்டது வேலூர் நேரடி கள ஆய்வு

திங்கட்கிழமை
வேலூர் பதிப்பு தினமலர் நாளிதழின் இலவச இணைப் பான கம்ப்யூட்டர் மலர்
12வது பக்கத்தில் லுடிர கூரநெ இணையதளம் மூலமாக ஏராளமான படங்களைப்
பார்க்கலாம். உதாரணத்துக்கு `முஹம்மது நபி கார்ட்டூன்’ என்று படத்தை
வெளியிட்டு உலகத்தின் வழிகாட்டி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழுக்கு
மாசு கற்பிக்கும் விதமாக ஏற்கனவே வெளியிடப் பட்ட டென்மார்க் நாளேடு
கார்ட்டூனை வெளியிட்டது.

செய்தி திக்கெட்டும் தீயென பற்றிப் பரவவும் (2.9.08) செவ்வாய்க் கிழமை
காலை ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் தினமலர் பத்திரிகை அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். உணர்ச்சிமிகு மக்களின் கோப அலை கண்டு வெயிலூ ரான
வேலூர் திணறிப் போனது.
களத்தில் நின்ற தமுமுக மாவட்ட நிர்வாகிகள் மக்களை அமைதி காக்கும் படி
கேட்டுக் கொண்டனர். மக்களின் போராட்டம் முறைப்படுத்தப்பட்டது.
காட்டாற்று வெள்ளமாய் திரண்ட கூட்டம் தினமலர் பத்திரிகையை தடை செய்ய
வேண்டும், அதன் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் விண்ணை
முட்டியது.

போராட்டம் தீவிரமடைகிறது. மக்கள் ஆவேசத்துடன் முழக்கங்களை எழுப்பிய படி
இருக்கிறார்கள். போராட்டத்தின் தீவிரத்தை உணராத காவல்துறை தினமலர்
அலுவலகத்திற்குச் சென்று விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு
மாறாக போராட்டம் மக்களின் மீது தடியடி நடத்தியது. மாவட்ட காவல்
கண்காணிப்பாளரின் உத்தரவின்படி அந்த தடியடி நடத்தப் பட்டது.
மனவேதனையடைந்த மக்க ளின் மீது உடல் காயம் ஏற்படச் செய்தது
காவல்துறையினரின் தடியடிப் பிரயோகம்.
கூடிய கூட்டம் குமுறும் எரிமலையாக மாறியது. கடுமையான தடியடி பிரயோகத்
திலும் மக்கள் கட்டுக்கோப்பு குலையாது முழக்கங்கள் எழுப்பினர். மக்களை
மிருகத்தனமாக காவல்துறையினர் வெறி கொண்டு தாக்கினர். தினமலர் அலுவ
லகத்தின் மீது சிலர் கற்களை வீசினர்.

தினமலர் இழைத்தது மிகப்பெரிய குற்றம். உலகமே வெறுத்த அந்த தீயச் செயலை
செய்த அந்தப் பத்திரிகையின் சம்பந்தப்பட்டவர்களின் மீது எவ்வித
நடவடிக்கையும் எடுக்க ஒரு சிறு முயற்சி யும் செய்யாத காவல்துறை
கண்காணிப் பாளர் அறிவு(?)செல்வம் என்பவர், கூடியிருந்த முஸ்லிம்
பெரியவர்கள் மற்றும் தமுமுக மாநில, மாவட்ட நிர்வாகி களிடம் அநாகரீகமாக
நடந்து கொண் டார். முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாகக் கருதும் நபிகள்
நாயகத்தை அவமதித்த தினமலரைக் கண்டிக்காமல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல்,
வேத னையில் வெம்பிக் கிடந்தவர்களை நோக்கி மிகக் கேவலமான வார்த்தை களை
வீசினார்.
காவல்துறை நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பலத்த
காயம் அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்களின் கண்டனத்தை தெரிவிக்க முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை அமைதிப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு
ஊழியன் என்பதையும் மறந்து, `என்னுடைய பேண்ட் ஜிப்பின் மீது கைவைத்து
பார்க்கிறாயா என்னுடைய ஆம்பிளைத்தனத்தை, எங்களை என்ன பொட் டையன் என
நினைக்கிறீர்களா?’ என கீழ்த்தரமாகப் பேசி அவமதித்திருக் கிறார். அது
அங்கு கூடிய தமுமுக நிர்வாகிகளுக்கு மட்டும் நேர்ந்த அவமான மாக கருதிக்
கொள்ள முடியாது, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உலக அளவில் 140 கோடி
முஸ்லிம்களையும் அவமதித்ததாகவே நாட்டு மக்கள் குமுறுகி றார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர், டி.ஐ.ஜி., டி.ஆர்.ஓ.,வேலூர் எம்.எல்.ஏ.,
மாநகர மேயர், துணை மேயர் ஆகியோர் சம்பவ இடத் திற்கு வந்தனர். மாவட்ட
ஆட்சித் தலைவர், தினமலர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்காமல் காலம்
தாழ்த்தி யதைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அராஜகப் போக்கு வேலூரின் கறுப்பு நாளாக அன்றைய தினத்தை
மாற்றியது. காவல்துறை உயர் அதிகாரிகளான எஸ்.பி. அறிவுச் செல்வம்,
ஏ.டி.எஸ்.பி. இராமதாசு மற்றும் டி.எஸ்.பி. சரவணன் ஆகியோரின் அலட்சியப்
போக்கே முஸ்லிம்களின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விட முக்கியக் காரணமாக
இருந்தது. போராடிய மக்களை கடுமையாகத் தாக்கியது, கைது செய்து காவல்
வாகனத்தில் ஏற்றிய பின்பும் அவர்களைத் தாக்கியது, நோன்பு நோற்றவர்கள்
என்றும் பாராமல் முஸ்லிம் கள் மீது தடியடி பிரயோகம் நடத்தியது,
அவர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது எதையும் இந்நாடு மறக்காது.
தமிழக அரசு உடனடியாகத் தலை யிட்டு தினமலருக்கு ஆதரவாக நடந்து சட்டம்
ஒழுங்கை சீர்குலைத்த காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே நல்லோர் களின் வேண்டுகோளாகும்.
|