காஷ்மீர நிலைமையும் ஜெயலலிதாவின் மதவாதமும்

மரியம்குமாரன்

ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர் களுக்கு மத்திய அரசு உதவி செய்ய முன்வந்திருப்பது போல காஷ்மீரில் மதவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்துக் களுக்கும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்து அண்மையில் ஜெயலலிதா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


அம்மையாரின் அறிக்கையில் அவரது மனதில் பொங்கும் மதவாதமும், குரூரமும், காஷ்மீர் குறித்து அவர் செய்யும் குழப்பமும் பளிச்சிடுகின்றன.


மதவாதத்தால் பாதிக்கப்படுவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசின் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கோத்ரா ரயில் சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டும் அரசு உதவிகளை வாரி வழங்கி, முஸ்லிம்களை மட்டும் இனப்படுகொலை செய்து அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்காத நரேந்திர மோடியின் தோழி ஜெயலலிதா இந்தக் கோரிக்கையை நரேந்திர மோடியை நோக்கி வைத்ததில்லை.


காஷ்மீர் பிரச்சினையில் இதுநாள் வரை வாய்மூடி மௌனியாக இருந்த ஜெயலலிதா, ஒரிஸாவில் இந்துத்துவ மதவெறிக் கும்பலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக அறிவித்தவுடன், காஷ்மீரில் இந்துக்கள் மத அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடித்து, வேண்டுகோள் வடிவில் ஒரு வெடிகுண்டை வீசுகிறார்.


“காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிர வாதிகளால் சின்னாபின்னமாக்கப் பட்டன. மத அடிப்படைவாதக் கலாச் சாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மைக் கலாச்சாரம் அழிக்கப் பட்டு விட்டது.


காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக் கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வி யில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய வர்கள். 1990களில் சொந்த மண்ணி லேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிர வாதக் குழுக்கள் சூறையாடி அள்ளிச் சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒரிஸாவில் கிறிஸ் தவர்கள் பாதிக்கப்பட்டதைப் போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிஸாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும்.


பிரதமர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம் பையும் வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதும் கரிசனம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக் களும் மதவாதத்திற்கு இரையானவர் களே என்று வெளிப்படையாக அறிவிக்கக் கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும்’’ - என்று நீட்டி முழக்கியுள்ளார் ஜெயலலிதா.


அவரது கூற்றுப்படி காஷ்மீரில் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள் ளார்கள், அவர்கள் அனாதைகளாய் ஆக்கப்பட்டுள்ளார்கள், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள், இதற்குக் காரணம் மத அடிப்படைவாதம் என்றும் ஆகிறது. பாதிக்கப்பட்டவர்களை இந்துக் கள் என நேரடியாகக் கூறும் ஜெயலலிதா, மத அடிப்படைவாதிகள் என அங்குள்ள முஸ்லிம்களையும், போராட்டக் குழுக் ளையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா தன் அறிக்கையில் கூறியுள்ளவை உண்மைகளா?


இல்லவே இல்லை.


ஒலிம்பிக்கில் பொய் கூறுவதை ஒரு போட்டியாகச் சேர்த்திருந்தால், அதில் ஜெயலலிதா தொடர்ந்து தங்கப் பதக்கங் களை வென்று, இந்தியாவுக்கு சிறுமை சேர்த்திருப்பார்.


ஆம். காஷ்மீரில் தொடரும் பயங்கரங் களால் பெரிதும் பாதிக்கப்பட்டு சின்னா பின்னமாகி சிதிலமடைந்து கிடப்பவர்கள் 99.9 சதவீதம் முஸ்லிம்களே. பண்டிட்டு களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்துக்கள் மட்டுமே காஷ்மீரில் மத (இஸ்லாமிய) அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதாவுக்கு, வேதனையே வாழ்வாகி வெதும்பிக் கொண்டிருக்கும் காஷ்மீர் முஸ்லிம்கள் மனிதர்களாகவே தெரியவில்லை போலும்.


காஷ்மீரிகளின் தேசிய இன விடுத லைப் போராட்டம், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையாகி இந்து முஸ்லிம் பிரச்சினையாக உருமாற்றப்பட்ட வரலாறு அவலமானது. தங்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் காஷ்மீரிகளை பாகிஸ்தான் ராணுவமாகக் கொச்சைப் படுத்துவதை நாட்டின் அறிவுஜீவிகள் பலரும் ஆணித்தரமாகக் கண்டித்துள்ளனர்.


காஷ்மீரில் 93 சதவீத மக்கள் முஸ்லிம்கள் என்பதால், அவர்களது அரசியல் உரிமைப் போராட்டத்திற்கும் மதச்சாயம் பூசப்பட்ட அபாயப் போக்கு ஆரம்பிக்கப்பட்டது.


காஷ்மீர் போராட்டத்தை மதவாதமய மாக்கியது யார்?


காஷ்மீர் பிரச்சினையில் மதவாதத் தைப் புகுத்தியவர்கள் சங்பரிவாரத் தினரே.


பால்ராஜ் மதோக் என்ற ஆர்.எஸ்.எஸ். காரரால் 1947ல் உருவாக்கப்பட்ட ஜம்மு பிரஜா பரிஷத் என்ற அமைப்புதான் காஷ்மீர் போராட்டத்தில் இந்துத்துவா வைப் புகுத்தியது.


காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப் பட்ட காலத்தில், இந்த இணைப்பு தற்காலிகமானதே, பின்னர் காஷ்மீர் மக்களிடையே கணிப்புத் தேர்தல் நடத்தி அதன்பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? அல்லது சுதந்திர நாடாக இயங்குவதா? என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்ற வாக் குறுதி காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல் லாமல், ஐ.நா.மன்றத்திலும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் வழங்கப்பட்டது.


காலப்போக்கில், அந்த வாக்குறுதி காற்றில் பறந்தது.


அதற்குக் காரணம் ஜம்மு காஷ்மீரில் விதைக்கப்பட்ட இந்துத்துவ வகுப்பு வாதத்தால் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட அதிருப்தி.


இந்து வகுப்புவாதத்தை விதைத்தவர் கள் ஜம்மு பிரஜா பரிஷத் என்ற ஆர்.எஸ். எஸ்.ஸின் கிளை அமைப்பினர் என்பதை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மேற்குவங்க முதல்வர் பி.சி.ராய்க்கு ஜூன் 29, 1953 அன்று எழுதிய கடிதம் அம்பலப்படுத்துகிறது.


ஜம்மு பிரஜா பரிஷத்தைப் பற்றி நேரு எழுதுகிறார்


“இந்த இயக்கத்தின் ஆபத்தான விளைவுகள் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கடினம். எப் போ தைக் காட்டிலும் இன்னும் சிக்கலானதாக காஷ்மீர் பிரச்சினையை இது ஆக்கியுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பாக என்றைக்கு இருந்தாலும் இறுதி முடிவு நமக்கு சாதகமாகத்தான்அமையும் என்பதில் எனக்கு கிஞ்சிற்றும் ஐயம் இருந்ததில்லை. ஆனால், இந்த இயக்கம் எனது எல்லா நம்பிக்கைகளையும் பொய்ப்பித்து விட்டது. காஷ்மீர் பிரச்சி னையில் நமது நிலை படுமோசமாக பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. காஷ்மீர் என்று இப்போது நான் குறிப்பிடுவது காஷ்மீர் பள்ளத்தாக்கைத் தான்.


பள்ளத்தாக்கில் உள்ள 90 சதவீதத் திற்கு மேல் இஸ்லாமியர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியும் தானே.


ஜம்மு பிரஜா பரிஷத் இயக்கம் இம் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பாரதூரமானது. ஜம்முவிலும், இந்தியா விலும் உள்ள வகுப்புவாத சக்திகளைக் கண்டு காஷ்மீர் முஸ்லிம்கள் அரண்டு போயிருக்கிறார்கள். இந்தியாவுடன் இணைதல் என்கிற அவர்களது முந்தைய விருப்பம் இப்போது நசிந்து போயுள்ளது.


பிரஜா பரிஷத் இயக்கத்தின் விளை வாகவே நாம் இன்று காஷ்மீர் பள்ளத் தாக்கை இழக்கும் நிலையில் உள்ளோம். உளவியல் மட்டத்தில் நாம் அதை ஏற்கனவே இழந்து விட்டோம். காஷ்மீர் மக்களின் நல்லெண்ணத்தைப் பெறாமல் அதை வெல்வது எப்படி? மக்கள் விரும் பாதபோது நாம் கத்தி முனையில் காஷ்மீரத்தைப் பிடித்து வைத்திருக்க இயலாது.’’


நேருவின் இந்தக் கடிதமே காஷ்மீர் பிரச்சினையை தெளிவாகப் பிரதிபலிக் கும் கண்ணாடி.


காஷ்மீர் முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை, ஊடக வன்முறையை, சிறிதும் ஓயாத சித்திர வதை களை வர்ணிக்கும் வலிமை வார்த்தைகளுக்கு இல்லை.


காஷ்மீர் முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விரிவாக அறிய விரும்புவோர், கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள `காஷ்மீரின் தொடரும் துயரம்’ என்ற நூலை (மொழிபெயர்ப்பு வெ.கோவிந்த சாமி) வாசிக்கலாம். (முகவரி எண்.3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பலிபாளை யம்,கோவை - 641 015).


1990ம் ஆண்டில் காஷ்மீர் இந்துக்கள் சொந்த மண்ணில் அனாதையாக்கப் பட்டதாக ஜெயலலிதா கூறுகிறார்.


1990ம் ஆண்டு ஜூலை 5 அன்று கொண்டு வரப்பட்ட ஆயுதப் படையினர் (ஜம்மு-காஷ்மீர்) சிறப்பு அதிகாரச் சட்டம், அங்குள்ள முஸ்லிம்களை எந்தக் கேள் விக் கணக்கும் இல்லாமல் குருவியை சுடுவது போல் சுடுவதற்கு வழிவகுத்ததை இந்துத்துவ அம்மணி ஏன் மறைக்கிறார்.
“கடந்த 5 ஆண்டுகளில் ரூ.265 கோடி சொத்துக்கள் சேதம், 148 பேர் உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர். 6931 தீ வைப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன’’ என்ற அபாயத் தகவலைத் தருகிறது காஷ்மீர் டைம்ஸ். (ஏப்ரல் 19, 1995)


ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.ரிஸ்வியின் கருத்தை கவனித் தால் காஷ்மீர் அரச வன்முறையின் கனபரிமாணம் விளங்கும்.


“காவல்துறை அமைப்புகளும் மாநில நிர்வாகமும் சட்டவிதிகளைத் தூக்கி யெறிந்து விட்டதாகவே தெரிகிறது. அனைத்து வகையான சட்டவிரோதச் செயல்களையும் அவர்கள் செய்து வரு கிறார்கள். கொலைக் குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் கூட இவர்களைப் பார்த்து வெட்கப்படக் கூடும். என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட நூற்றுக் கணக்கான வழக்குகளில் கைதிகள் சட்டவிரோதமாகவே சிறை வைக்கப்பட்டி ருந்தனர். இந்த நீதிமன்றம் அவர்களை விடுவிக்கும்படி கடுமையாக உத்தரவிட்ட பின்பும்கூட அவர்கள் விடுதலை செய்யப் படவில்லை. கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாததால் நூற்றுக்கணக் கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்தபிறகு, அந்நபர்களைக் கொன்று விடுவதால் பல வழக்குகள் தேங்கி நிற்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் சட்டம் ஒழுங்கு இயந்திரம் முழுதும் நொறுங்கிப் போயுள்ளது.


சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாகச் சொல்லப்படும் இந்த நீதிமன்றமே கூட செயலற்ற நிலையில் தான் இருந்து வருகிறது என்று சொல்ல நான் வெட்கப்படவில்லை.


இந்த நீதிமன்றத்தின் ஆணைகளை யாரும் மதிப்பதில்லை. ஆயிரக்கணக் கான ஆணைகளைப் பிறப்பித்தும் பயனில்லை.’’


- இது நீதிபதியின் நேர்காணல் கருத்தோ, மேடைப் பேச்சோ அல்ல. ஜலில் அந்த்ராபி என்பவர் அரசு மீது தொடுத்த ரிட் மனு எண் 850/94ஐ ஒட்டி, நீதிபதி ரிஸ்வி அளித்த நீதிமன்ற ஆணையின் ஒரு பகுதிதான் மேற் கண்ட வரிகள்.


காஷ்மீரில் பாதிக்கப்படும் பிராமண பண்டிட்டுகளுக்காக ஜெயலலிதா இனப் பற்றோடு குரல் கொடுப்பதை நாம் குறை கூறவில்லை.


பண்டிட்டுகள் மட்டுமே பாதிக்கப் பட்டிருப்பது போலவும், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் (ஜெயலலிதாவைப் போல) சுகபோக வாழ்க்கை வாழ்வது போலவும் கூறு கின்ற திரிபுவாதத்தைத் தான் கண்டிக் கிறோம்.


ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் அப்பாவிகளை பலியாக்கும் எந்தச் செயலையும் நாம் அங்கீகரிக்க முடியாது. அந்தவகையில் பண்டிட்டுகள் அநியாய மாக பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு நிவாரணம் காணப்பட வேண்டியதுதான். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதத் தால் தான் காஷ்மீரில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஜெயலலி தாவின் கருத்து விஷமத்தனமானது.


இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள். அமைதியும், சமாதானமும் தான் இஸ்லாத்தின் அடிப்படை.


இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகெங்கும் பரவினால் போரும், பூசலும் மறையும் என்பதே உண்மை.


காஷ்மீர் பிரச்சினையைத் தவறாக சித்தரித்து, முஸ்லிம்களின் பாதிப்பு களை இருட்டடிப்பு செய்து, இஸ்லாத் தின் அடிப்படையையும் கொச்சைப் படுத்திய ஜெயலலிதா, தன்னை மீண்டு மொருமுறை தெளிவாக அடையாளப் படுத்தியுள்ளார்.


 

 

 




 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.