![]() |
|||
|
|
தாராபுரம் : பள்ளிவாசல் பன்றி வீசிய இந்து முன்னணி பிரமுகர் விடுதலை சில
மாதங்களுக்கு முன்னால் ஈரோடு மாவட்டம் தாராபுரம் பள்ளி வாசலில் பன்றியை
கொன்று வீசி மதப் பதட்டத்தை ஏற்படுத்தியதற்காக கருணாகரன் என்ற இந்து
முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டான். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்
கைது செய்யப் பட்ட கருணாகரனை சென்னை உயர்நீதி மன்றம் விடுதலை
செய்துள்ளது. பள்ளி வாசலுக்குள் பன்றியை போட்டதால் எந்த பதட்டமும்
ஏற்படவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து
வாதிட்டிருக்கிறார் கருணாகரனின் வழக்கறிஞர். நீதிமன்றமும் இதை ஏற்று
அவன் மீதுள்ள தேசியப் பாதுகாப்பு சட்டத்தை விலக்க உத்தரவிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமுமுக தலைமையில் பேரணி, ஆர்ப் பாட்டம்
நடத்தியதையெல்லாம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொல்ல மறந்து விட் டாரா?
அல்லது காவல்துறை வேண்டு மென்றே மறைத்து விட்டதா? மதவெறி பிடித்த
கருணாகரன் போன் றோர் மீண்டும் ஊருக்குள் நடமாடுவதை தாராபுரம் பகுதி
மக்கள் விரும்பவில்லை. இதனால் மீண்டும் தாராபுரத்தில் பதட்டம் ஏற்படும்
சூழல் உருவாகியுள்ளது. இதை காவல்துறையும், அரசும் உணர வேண்டும்.
|
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||