![]() |
|||
|
|
ஒரிசா படுகொலைகளை நியாயப்படுத்தும் ராமகோபாலன் அபூமலர்மதி
ஒரிசாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை ரணமாக்கி, கன்னி யாஸ்திரிகளை மானபங்கம் செய்து, எரித்துக்கொன்று வெறியாட்டம் நடத்தி வரும் சங்பரிவார அராஜகங்களை வலி மையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளார் தமிழகத்தின் பயங்கரவாதி ராமகோபால அய்யர். “ஒரிசா மாநிலத்தை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து கொட்டி மதம் மாற்ற முயற்சித்தனர். அதைத் தடுத்து நிறுத்திய வர் சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி. அவருக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப் படவில்லை. தங்களது உயிருக்குயிரான சுவாமி கள் படுகொலை செய்யப்பட்டவுடன் மலைவாழ் மக்களால் ஆத்திரத்தையும், கோபத்தையும், எரிச்சலையும் கட்டுப் படுத்த முடியவில்லை. சுவாமிகளை சதிசெய்து கொல்ல காரணமானவர்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு மறைவிட மும் பாதுகாப்பும் உதவியும் செய்த சர்ச்சுகளைத் தாக்கினார்கள்.’’- என்று தன் ரத்தத்தில் கலந்தோடும் விஷத்தை வார்த்தைகளால் வாந்தி யெடுத்துள்ளார் ராமகோபால அய்யர். 85 வயது சுவாமிகளை சதிசெய்து கொல்லக் காரணமானவர்களைத்தான் மலைவாழ்(?) மக்கள் தாக்கினார்களாம். சதிகாரர்களுக்கு மறைவிடமாக சர்ச்சுகள் இருப்பதால்தான் கொளுத்து கிறார்களாம். பயங்கரவாதத்திற்கு பலியான மக்களையே பயங்கரவாதி களாக சித்தரித்து அறிக்கை விடுகிறார் மறைகழண்ட பயங்கரவாதி ராமகோபாலன். கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் ஒருநாள் விடுமுறை அறிவித்ததை `பிளாக் மெயில்’ நடவடிக்கை என்கிறார் இந்தப் பேர்வழி. ஏற்கனவே, கன்னியாஸ் திரிகள் மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை `தேசபக்த நடவடிக்கை’ என்றார் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால். மாட்டுத் தோலை கையில் வைத்திருந்ததற்காக ஹரியானா வில் தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை வி.எச்.பி. நியாயப்படுத் தியது. ஒரிசா கிறிஸ்தவர்கள் படுகொலையை ராம கோபாலன் நியாயப்படுத்துகிறார். மனிதநேயர்கள் என்ன செய்ய முடியும்? இவர்களைக் காறித் துப்புவதைத் தவிர... |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||