|
டெல்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு:
த.மு.மு.க கடும் கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
நமது நாட்டின் தலைநகரம் டெல்லியில் இன்று மீண்டும் நடைபெற்ற குண்டு
வெடிப்பினை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக்
கண்டிக்கிறது.
இந்தியாவின் இறையான்மைக்கு சவால் விடும் வகையில் அப்பாவி இந்தியர்களை
குறிவைத்துத் தாக்கும் பயங்கரவாதிகள் எம்மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல.
மனித நேயமுள்ள எவராலும் சகிக்க முடியாத இத்தகைய பயங்கரவாத செயல்களைப்
பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயச் சேர்ந்த அப்பாவிகளைக் கைது செய்யாமல்
இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு,
கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.
நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பயங்கரவாத சக்திகளுக்கு பாடம்
கற்பிக்கும் வகையில், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
எனவும் தமுமுக கோருகின்றது.
|