TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Sunday
Sep 05th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home செய்திகள் சமுதாய அரங்கம் ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்

E-mail Print PDF

நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்
ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.
அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.
12.07.2010 அன்று வழக்கம் போல்
கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்த
பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனை
சரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்ற
கண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.
13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்
அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்
கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரை
கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
சமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடி
மறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்
துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்
மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
-களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்

 

Comments  

 
+1 #14 ராஜமொஹம்மத் 2010-08-08 23:02
நமக்கு என்ன !, என்ற வார்த்தை கோழைத்தனம் கொண்டது. பாதுகாக்கப்படும ் சீநிமூட்டையை எறும்பு தின்றால்கூட அதை தட்டிக்கேட்கும் மனப்பக்குவம் வேண்டும். அத்தகைய சமுதாயம் அமையும் போழுதான்....சிறப்பானதோர் வாழ்க்கை முறை எதிகாலத்தில் அமைந்தது விடுகிறது.அந்த வஹையில் தா.மு.மு.க செய்தது சரிதான்.
Quote
 
 
+3 #13 EMANAI_ MOHD ISMAIL 2010-07-31 07:59
அநியாயம் எங்கு நடந்தாலும் எதிர்பது எங்களின்(த மு மு க )கடமை
Quote
 
 
+6 #12 EMANAI SHARFUDEEN 2010-07-29 19:33
குடும்பத்துப் பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது. பொதுமக்களளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் . தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள் பொதுமக்கள் உதவியுடன்அவரை கையும் களவுமாக பிடித்தனர் எங்களுக்கு அதிகாரம் கொடுத்தது..
அல்லாஹ் எங்கள் இயக்கத்தினர் அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க வர்கள்.
Quote
 
 
+5 #11 Trichy Amanuallah 2010-07-29 14:16
அன்பு நண்பர் ஷர்புத்தீன் அவர்களுக்கு, தாங்கள் ஒரு நம் சமூகத்தின் துரோகி என நினைக்கின்றேன். இன்று ஏர்வாடியில் நடந்தது. நாளை உங்கள் ஊரிலும், உங்கள் குடும்ப பெண்களுடனும் நடக்கலாம். அதற்கு தற்காப்பு நடவடிக்கைகளே இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் . அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உங்கள் சகோதரிகள் யாரும் யாருடனாவது இணக்கமாக இருந்துவிட்டால் விட்டுவிடுவீர்க ளா. சரி என்றால் நீங்கள் சொல்வது சரிதான்.
Quote
 
 
+6 #10 Muthupet Mohaideen 2010-07-29 12:47
அன்புச்சகோதரர் சர்புதீன் அவர்களே!

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தன் தோழர்களிடத்தில் ஒன்றை கூறுகிறார்கள். தோழர்களே! நீங்கள் உங்கள கண் முன்னால் ஒரு தவறை கண்டால் முதலில் உங்களுடைய கையால் தடுங்கள் உங்கள் கையால் தடுக்க சக்தியில்லை என்றால் உங்கள் நாவால் தடுங்கள் அதற்கும் உங்களிடத்தில் வாய்ப்பு இல்லையென்றால் கடைசியாக (மூன்றாவதாக) மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள். இதுவே ஈமானின் கடைசி நிலை என்று சொல்லும் நபி மொழியை பின்பற்றும் தமுமுக வினர் உங்கள் பார்வையில் குற்றவாளிகளா? அல்லது செய்யும் தவறை (விபச்சாரத்தை) தடுத்தவர்களை குற்றவாளிகளாக்க ும் நீங்கள் குற்றவாளியா?
Quote
 
 
+2 #9 HMS 2010-07-29 10:36
anbu nanbaa kallappeyaril karuthu solli ullai sarbu ,kootti kotuthu vaalvathaikkaat tilum maranam mealaanathu , nee muslimaaha irunthaal onru solluhirean eemaanin nilai 3, 1=oru thavarai karathaal thduppathu 2= allathu naavaal thduppathu 3= manathaal veruppathu intha 3m illai yenraall unnidam emaan ullathaa ena sinthithu paar ,nam anaivarukkum iraivan neraana valiyai kaattuvaanaaha, ,,,
Quote
 
 
+2 #8 firthouse ali 2010-07-29 10:32
pls follow your ameer pro. jawahirullah's non violence way. he is honest person.
Quote
 
 
-7 #7 firthouse ali 2010-07-29 10:31
Dear TMMK brothers,

Why are you unnecessarily involving this kind of prostitution cases. Your first duty is making daava to non muslims and also you are in the right situation to make the strong the foundation of mmk. Do right and follow right. We are not government police to look out their job. this will give you a bad name tmmk's morality
Quote
 
 
+4 #6 Kayal Shahul 2010-07-28 20:44
நண்பர் sarfuddin அவர்களே....

உங்களை மாதிரி கோழைகள் இருக்கும் வரை நம் சமூகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது..
Quote
 
 
+5 #5 Habeeb 2010-07-28 20:12
Mr. Sfuddinar
ஏதாவது கூற வேண்டும் என்று எதையாவது உலரதீர்கள் . . .
மனிதனாய் பிறந்தால் தீமையை தடுக்க வேண்டும் . . .
அவன் தான் மனிதன் . . .
நல்ல முஸ்லீமும் கூட . . .
Quote
 
 
+3 #4 hibayathullah 2010-07-28 17:58
தமுமுகவினர் செய்தது சரிதான். அதுபோல் காவல்துறையினரும ் சட்டப்படியே நடந்துள்ளார்கள் . என்னசெய்வது?
Quote
 
 
+4 #3 Syed Meeran 2010-07-28 16:02
Dear WEBMASTER ,the content posted by so called sarfuddin is not good to be published.plz dnt post these kind of bad comments.The guy has used such a rubbish foul language.Plz delete this.
The agitation held by tmmk is one the right direction,innoc ent people should be released.
Quote
 
 
+6 #2 zainul 2010-07-28 15:52
ஹலோ mr . சர்புதீன் இந்த பிரச்சினையை தட்டி கேட்க யாரும் அதிகாரம் கொடுக்க தேவை இல்லை, உங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் இந்த மாதிரி நடந்தால் நீங்கள் பாத்துக்குட்டு சும்மாதான் இருபின்களா ? தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்பதில் tmmk வுக்கு நிகர் tmmk தான். tmmk பண்ற காரியங்கள் எல்லாம் உருபடுற காரியம்தான்.
உங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேர் உருபடாத கருத்துகளை சொல்றதால மத்தவங்க தவறா நினைக்கிறாங்க ? உங்கள் என்னத்தை மாற்றி கொள்ளுங்கள் ?? நீங்கள் உதவி செய்யாவிட்டாலும ் பரவாயில்லை ? பிறர் செய்யும் உதவியை குறை சொல்லாதீர்கள். உங்கள் என்னத்தை மாற்றி கொள்ளுங்கள்
Quote
 
 
-20 #1 sarfuddin 2010-07-28 02:15
எதாவது உருபிடுற காரியமா பண்ணுங்க...
கள்ள தொடர்பு வச்சு இருந்த உங்களுக்கு என்னா?
அவங்க இரண்டு பெரும் ஒத்து போன்னங்கள்ள அப்புறம் என்ன?
உங்களுக்கு எவன் அதிகாரம் கொடுத்தது.
உங்கள் இயக்கத்தினர் குற்றவாளிகளே!
Quote
 

Add comment


Security code
Refresh

ரமலான் வசந்தம்

Comments

  • ella puhalum iraivanukke.tmmk do good job very wel... More...
  • ella pugalum iraivan oruvanukke , valarga ungal pa... More...
  • Many thanks -jazakallhu khyre More...
  • நம் சமுதாய மக்கள் நலனுக்காக திராவிடக் கட்சிகள் திம... More...
  • Very excellent video presentation and it must reac... More...

Calendar

  • 2010 (425)
  • 2009 (183)
  • Hot topic

    Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    Who's Online

    We have 44 guests online

    J!Analytics