TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Sunday
Sep 05th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home செய்திகள் சமுதாய அரங்கம் பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

E-mail Print PDF

 

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும்.

 


ஆனால், கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகால மாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

கடந்த ஜூலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமு கவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸை திருப்பினார்.

வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டா வது கியரில் நகர்த்தியிருக்கிறார்.

அப்போது காவல் துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத் தியுள்ளது. பாஜக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் தனது தொண்டர்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார்.

எந்த விதி மீறலும் இல்லாமல், யாருக்கும் இடையூறு இல்லாமல் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸ் சென்றுவிட்டது.

மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்று விட்டார்.

அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல் டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட, அதற்குள் ஓடிவந்த காவல் துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது.

அதற்குள் பாஜகவினர் தங்கள் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும் விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.

ஏற்கனவே அங்கு SP முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங் களையும் உடைத்தனர்.

போலிசார் துரத்த தொடங் கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியி ருந்த கொடிகளை அவிழ்த்துவி ட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப் பட்ட செய்தி அறிந்ததும் திருத்து றைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மாவட்ட தலைவர் தாஜுதீன், ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ், யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதற்குள் நாச்சிக்குளம், கட்டி மேடு வழியாக பாஜகவினர் வாகனங்களில் திரும்பியதை தமுமுகவினர் அவர்களை மறிக்க புறப்பட்டனர்.

இதையறிந்த காவல்துறையினர் மாவட்ட தலைவர் தாஜுதீன் மூலம், தயவு செய்து பதிலடி கொடுக்காதீர்கள் எனக் கெஞ்ச, அதன்படி தாஜுதீன் நாச்சிக்குளம், கட்டிமேடு தமுமுகவினரை மறிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்து றைப்பூண்டி நோக்கி விரைந்தனர். திருத்துறைப் பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காறித்துப்பாத குறையாக திட்டிக் கொண்டிருந்தனர்.

இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன் படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்கு உதவதான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது என திருத்துறைப்பூண்டி மக்கள் மூலைக்கு மூலை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறை பாஜகவினரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பிலிருந்தே அழுத்த ங்கள் அதிகரிக்க, அனைத்துக் கட்சியினரும் இந்த அராஜகத்தை கண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

அடுத்த நாள், மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.

குற்றவாளிகள் பிடிக்கப்படாத தை கண்டித்து திருவாரூரில் ஷிறி அலுவலகம் நோக்கி கறுப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஞிமிநி அவர்கள் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும், மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு வரும் தினத்தில் கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும், ஜூலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால், ஜூலை 31 அன்று கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.

ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல் பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை தமிழகமெங்கும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தமுமுகவினர் இதுவரை ஜனநா யகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படி செய்யாவிடில், அதன் பின் விளை வுகளுக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். கார ணம், எங்களின் ஒவ்வொரு ஆம் புலன்ஸும் எங்களது ரத்தம், வியர்வையினால் ஓடிக் கொண் டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது விழுந்த தாக்குதல், எங்கள் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்கு தல்களாகும்.

பொன்ராதா கிருஷ்ணன், கறுப்பு (எ) முருகானந்தம் கைதாவார்களா?

திருத்துரைப்பூண்டி காவல் நிலையத்தில் புகுந்து உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தி, தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது பொய் வழக்கு போட வைத்தும், பா.ஜ.கவினரை கைது செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர் பா.ஜ.க. தலை வர் பொன் ராதாகிருஷ்ணணும், கறுப்பு (எ) முருகானந்தம் மற் றும் பா.ஜ.கவினரும்.

காவல் நிலையத்திற்குள் புகுந்து இத்தகைய அத்துமீறல்களைச் செய்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு   செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை. இல்லையெனில் இதே நடைமுறையை எல்லாக் கட்சியினரும் பின்பற்ற ஆரம் பித்து விடுவார்கள்.

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் படாவிடில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முக்கிய வழக்கு ரைஞர்கள் முயற்சி எடுக்கின்றனர்.

ஒத்திவைக்கப்பட்ட கறுப்புக்கொடி ஊர்வலம்

தமுமுக ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கிய அநியா யக்கார பா.ஜ.க குண்டர் களை கண்டித்தும், காவல் துறை அவர்களைக் கைது செய்யாததைக் கண்டித்தும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் (ஷிறி) அலுவலகம் நோக்கி தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் ஜூலை 27 அன்று கறுப்புக்கொடி ஊர்வலம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

தமுமுக தொண்டர்களும், ஜமாஅத்தினரும் இந்த ஊர்வ லத்தில் ஆயிரக்கணக்கில் திரளப் போகும் தகவலை உளவுத் துறையின் மூலம் தெரிந்து கொண்ட உயரதிகாரிகள் தமுமுக தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலச் செயலாளருமான பேரா.ஹாஜாகனி குற்றவாளிகளைக் கைது செய்தால் இந்த ஊர்வலத்தை நிறுத்தி விடலாம் என மாவட்ட ஷிறி&யிடம் தெரிவித்தார். தமிமுன் அன்சாரியும் இதே பதிலைக் கூறினார். பொதுச்செயலாளர், ஊர்வலம் என் தமையில் தான் நடக்கப் போகிறது. நீங்கள் என்னைக் கைது செய்தாலும் பராவாயில்லை. ஊர்வலத்தை நடத்துவோம் என்றார். பிறகு SP, DIG உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பொதுச் செயலா ளரைத் தொடர்பு கொண்டு 27&ந் தேதி முதலமைச்சரின் திருவா ரூர் வருகை முடிந்தவுடன் கண்டிப்பாக குற்றவாளிகளைக் கைது செய்வோம் என உறுதிய ளித்தனர். அதைத் தொடர்ந்து கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Last Updated ( Sunday, 01 August 2010 12:26 )  

Comments  

 
0 #17 madugai manavan 2010-07-31 23:18
assalamu alaikum pala perhalin uyirai eduka therindha karupu aduhaluku oru uyirin vilai madipai theriyaml irupadhilacchar iyamillai, intha sampavathai kanum mattru mada sahodararhal samudhaya panikaga ulla vahanthai udaidhu norokiyadaharku muslim sahodahararhal aarpatam seivathai uda enagalin udan pirava sahodahararhal ana neengal ungal kandana kuralhali ongi elupi aarpatathil insha allah neengal kalandhu kolla vendum oru dhesathin uyarve ottrumaiyil than irukkiradu !!
Quote
 
 
+5 #16 yousufmadras 2010-07-29 18:46
கோவை குண்டு வெடிப்பிற்க்கு பின் 99% அடக்கி வாசித்த RSS கும்பல் தற்போது மெல்ல தலை காட்ட ஆரம்பித்துள்ளது .
அப்போது இருந்த முஸ்லிம்களை விட இப்போது வீரியமிக்க முஸ்லிம்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டிருந ்தால் அதற்க்கு நாம் என்ன செய்வது.
Quote
 
 
+2 #15 ghouse pno 2010-07-27 21:37
intha kodiyargal nandri kettavargal
Quote
 
 
+1 #14 AL-AMAAN kader 2010-07-27 21:14
salaam.manitha neya sevaikkaga naam nam sahotharargalin kadina ulaippal petra ambulance yentha soolnilaiyilum paathippukku ullaga koodathu.mavattam mattumintri tamil nadu muluthum intha akkiramathai kandithu makkal sakthiyai thiratti aarpaattam nadatha vendum.
Quote
 
 
+4 #13 AbuFaaiz 2010-07-27 20:15
குடி, போதை, சினிமா என்று சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை நேர்வழி படுத்தி, சமூக சேவகர்களாய் மாற்றி வரும் தமுமுக வின் ஆம்புலன்ஸ் திட்டம் எல்லா தரப் பட்ட மக்களாலும் வர வேற்கப் பட்டது. இதன் உச்சானியாக கலைஞர் அவர்களே தனது சொந்த செலவில் இரண்டு பெரிய ஆம்புலன்ஸ்களை 2007இல் வாங்கிக் கொடுத்துள்ளார். எனவே காவல் துறை அவர் காதுக்கு செய்தி போவதற்கு முன்னால் இந்நிகழ்வின் கயவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - TMMK Kuwait
Quote
 
 
+1 #12 tameem ansari 2010-07-27 19:02
Assalamu alaikum
BJP gundar galin arrajagam thodardhal tmmk vin thondargal thagunda badiladi tharuvaargal enbadhu BJP ku innum theriyavillai. thalaivargalin kattupattil dhan tmmk thondargal irrukiraargal.
Quote
 
 
+2 #11 HASIL-THITTACHERY 2010-07-27 16:53
TMMK Ambulence meethu thakudhal nadathiya BJP theeviravadhiga lai thamilaga arasey.........you must take action now according to IPC AND NSA ACT
Quote
 
 
0 #10 SYED YOUSUF - kas 2010-07-27 15:23
ya allah avvarkalukum naar vazi katuvayaka
manithanyam avvarkal unarum kalam vku virivil
Quote
 
 
0 #9 sadiq 2010-07-27 13:57
indha bjp kundargalai kadumayaana muraiyil thandikkapadave ndum, uyir kaaka udavum ambulance koodava ivargaludaya kangalukku theriyavillai , meendum oru kovaiyai uruvaaka ivargal thittam podugirargalo ennavo..... kaaval thurai ivargalai kanganikka vendum.
Quote
 
 
+6 #8 Muthupet Mohaideen 2010-07-27 12:32
எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்த வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது . ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல், எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும ். இதற்கு பா.ஜா.க வினர் தாங்களாகவே முன்வந்து குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டு, தமுமுகவிடமும் பொதுமக்களிடமும் பொது மன்னிப்பு கோரவேண்டும்.

இல்லையேல் தமுமுகவினரும்,ப ொதுமக்களும் கொத்திது எழுவோம் அவ்வாறு எழும்பொழுது அதன் விளைவுகளாக பா.ஜா.க நிறைய இழக்க வேண்டிவரும் என்பதை தமிழக காவல்துறை விளங்கி அதிவகமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை துரிதமாக செயல்படுமா? அல்லது பொதுமக்களும் தமுமுகவும் களத்தில் இறங்கி செயல் படவேண்டுமா?
Quote
 
 
0 #7 nagore rafeek 2010-07-27 11:47
hindu, muslim otrumaiyaga vaalum thiruthuraippoo ndi il podu makkalukku udavi varum tmmk ambulance i BJP kaarargal thaakkiyiruppad u mada duvesathai erpadutha BJP muyarchikkiradu .
arasu vilithukkondu.
veri seyalil eedupatta bjp vanmurai kumbalgai desa paadukkaapu sattathil kaidu seyya tmmk muyarchikkvendu m.a
Quote
 
 
0 #6 MOHAMED SADIQ 2010-07-27 11:41
NAAM SEYAVENDIYA NALLA VISHAYANGALAI SEYDUKONDU DAN ERUPPOM THOTRUBAVARGAL THOTRATTUM PINBU KANDIPPA INSHA ALLA ELLORIN ULLANGALUM MAARUM NERAM MIGA ARUGIL ULLADU
Quote
 
 
0 #5 faisal ahamed 2010-07-27 11:06
Assalamu alaikum
intha seithe veru entha nalithalilum varavillai enbathal migavum varuthamaga ullathu.
Quote
 
 
0 #4 EMANAI_ MOHD ISMAIL 2010-07-27 10:52
எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவா யாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக
Quote
 
 
+1 #3 nagore rafeek 2010-07-27 10:43
makkalukku sevai seyduvarum tmmk ambulance meedu thaakkudal nadathiya BJP roudigal meedu nadavadikkai edukkaamal tamilaga arasu alatchiyamaaga iruppadu nalla arasin pokkalla
paasisa BJP vinar meedu udan nadavadikkai tamilaga arasu mun varavendum.
Quote
 
 
0 #2 TAS Rahmathullah UAE 2010-07-27 10:10
B J P JUNGLE PEOPLE NOBODY EXPECTED FROM B J P GUNDAAS RESPCTED WORK. WHEN THEY ATTACKED THE AMBULANCE THEY SHOWED THEIR ORIGINAL FACE. SO IN FUTURE IF THEY ATTACK AGAIN PLEASE DONT WAIT
Quote
 
 
+3 #1 Jahir Jasim 2010-07-27 09:34
Assalamu Alaikkum
police should take necessary action against the rowdies, if not we will start our agitation as mentioned date.
ur's always
Jahir
An Naseer Baithulmal
TNTJ Vawaladi Branch
Quote
 

Add comment


Security code
Refresh

ரமலான் வசந்தம்

Comments

  • ella puhalum iraivanukke.tmmk do good job very wel... More...
  • ella pugalum iraivan oruvanukke , valarga ungal pa... More...
  • Many thanks -jazakallhu khyre More...
  • நம் சமுதாய மக்கள் நலனுக்காக திராவிடக் கட்சிகள் திம... More...
  • Very excellent video presentation and it must reac... More...

Calendar

  • 2010 (425)
  • 2009 (183)
  • Hot topic

    Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    Who's Online

    We have 53 guests and 1 member online
    • EMANAI_ MOHD ISMAIL

    J!Analytics