TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Sunday
Sep 05th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home
July 2010

Wednesday 28 July 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம் PDF Print Write e-mail
Written by Administrator
Wednesday, 28 July 2010 00:16

நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்
ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.
அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.
12.07.2010 அன்று வழக்கம் போல்
கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்த
பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனை
சரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்ற
கண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.
13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்
அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்
கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரை
கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
சமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடி
மறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்
துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்
மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
-களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்

Read more


Tuesday 27 July 2010

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 27 July 2010 02:44

 

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும்.

 

Read more
Last Updated ( Sunday, 01 August 2010 12:26 )

பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15க்கு பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 27 July 2010 01:41

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அனைத்து விசாரணைகளும் வழக்குறைஞர்களின் விவாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு செப்டம்பர் 15க்கு பிறகு எந்த தேதியிலும் வழங்கப்படலாம் என்ற அறிவிப்புடன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதிற்குள் சில பயங்கரவாதிகள் புகுந்து ராமர் லட்சுமணர் சீதை மற்றும் அனுமாரின் சிலைகளை வைத்து விட்டனர். அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் பாபரி மஸ்ஜிதை பூட்டுவதற்கு உத்தரவிட்டார். இரண்டு பூஜாரிகள் மட்டும் பள்ளிவாசலுக்குள் சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டடிருக்கும் சிலைகளுக்கு பூஜை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருந்தது. இச்சூழலில் 1986 பிப்ரவரி 2ம் நாள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திர பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே செல்வதற்கு மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் முனைந்தன. இறுதியில் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.


பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து லக்னோ பிரிவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வழக்குறைஞர்களை நியமித்து நடத்தி வந்தது. வழக்கு நிதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ரூ7.5 லட்சம் வழங்கப்பட்டது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமுமுக ஆண்டு தோறும் போராட்டம் நடத்தி வந்தது. 2004 டிசம்பர் 6 அன்று டெல்லியில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அன்று மாலை பிரதமரை சந்தித்த தமுமுக குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

 

இதன் பிறகு அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால் மற்றும் தரம்வீர் சர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள். சுன்னத்தி மத்திய வக்ப் வாரியம் எதிர் விசாரத் சர்மா என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜுலை 26 அன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நீடித்தது. நீதிபதிகள் விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர். இரு தரப்பு வழக்குறைஞர்களின் இறுதி வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இறுதியில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் செப்டம்பர் 15க்கு பிறகு எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் ஹிந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும் முஸ்லிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் நீதிமன்றம் முன்பு முன்னிலையாகி சாட்சியம் கூறினர். முஸ்லிம்கள் தரப்பு சாட்சிகளில் பெருமாபாலனவர்கள் இந்துக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்குறைஞர் ஜபர்யாப் ஜீலானி செய்தியாளர்களிடம் பேசிய போது:  நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கின்றது. எங்கள் தரப்பு வாதம் மிக வலுவாக உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கிடைக்க இறைவனிடம் நாமும் கையேந்துவோம்

 

Read more
Last Updated ( Tuesday, 27 July 2010 02:18 )


Tuesday 20 July 2010

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 20 July 2010 14:16

நான்கு வாரமாக ஜம்மு காஷ்மீர் மாநில தலை நகரான ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொழுகை நடை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. Read more


ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 20 July 2010 14:09

நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத் தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது.

Read more
Last Updated ( Tuesday, 20 July 2010 14:20 )

குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 20 July 2010 14:07

கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென, மருத்துவ நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர். Read more


மீனவர்களை கொல்லாதே! வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 20 July 2010 14:05

இந்திய இலங்கை கடற்பகுதியில் சமீபத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஜூலை 16 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


மமக து.பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மமக மாவட்டச் செயலாளர் முபாரக், ஒன்றியச் செயலாளர் நஸ்ருல் இஸ்லாம், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லாஹ், சாகுல், பரக்கத்அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

Read more
Last Updated ( Tuesday, 20 July 2010 14:23 )

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 20 July 2010 14:05

தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்க ளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி 28&வது வார்டுக்கான தேர்தலில் திமுகவும், மனிதநேய மக்கள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. Read more



Monday 19 July 2010

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு துபாய் அரசு பாராட்டுச் சான்றிதழ் PDF Print Write e-mail
Written by Administrator
Monday, 19 July 2010 19:30

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சார்பாக மக்கள் பயன் பெறும் வகையில் இரத்ததான முகாம்கள் பரவலாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் அதிகப்படியான நபர்கள் கலந்துக் கொண்டு இரத்தத்தை தானமாக அளித்தமைக்காக துபாய் அரசாங்கமும், துபாய் மருத்துவனைகளின் உயரிய கூட்டமைப்பும் இணைந்து பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. Read more


ஜோசப் மீதான தாக்குதல் இதற்கு பெயர் சமுதாயப் பணி அல்ல...! PDF Print Write e-mail
Written by Administrator
Monday, 19 July 2010 11:34

கேரளாவில் கிறிஸ்த்துவ கல்லூரி ஒன்றில், மலையாள விரிவுரையாளரான ஜோசப் என்பவர், முஸ்லிம்களின் உணர்வு களை புண்படுத்தி, வினாத்தாள் ஒன்றை தயாரித்திருக்கிறார். இது பெரும் சர்ச்சையாகி, முஸ்லிம் இயக்கங்கள் பல போராட்டங்களை நடத்தியதால், அவரை போலீஸார் கைது செய்தனர். Read more


Page 1 of 7
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  Next 
  •  End 
  • »

ரமலான் வசந்தம்

Calendar

  • 2010 (425)
  • 2009 (183)
  • Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    J!Analytics